DIRECT APPOINMENT: மத்திய அரசுப் பணிகளில் அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முறைக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இந்த முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய இந்த அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
மத்திய அரசுத் துறையில் இருக்கும் இணை செயலாளர்கள், இயக்குநர்கள் உள்பட 45 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ராகுல் காந்தி உள்பட பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு “மத்திய அரசு பணிகளில் அதிகாரிகள் நேரடியாக நியமனம் செய்வது சமூக நீதி மீதான தாக்குதல்” என்று கூறி கண்டனம் தெரிவித்து இருந்தார்.
மேலும் பல தலைவர்கள் இந்த முறைக்கு எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில் பாஜக கட்சி “மத்திய அரசுப் பணிகளில் அதிகாரிகள் நேரடியாக நியமனம் செய்யும் முறை காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறியிருந்தது. இருப்பினும் அதற்க்கு எதிர்ப்புகள் அதிகரித்து வந்தது.
அதாவது மத்திய அரசு பணிகளில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களும் அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து மத்திய அரசு பணிகளில் அதிகாரிகள் நேரடியாக நியமனம் செய்யும் முறையை நிறுத்த வேண்டும் என்று யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த சிலரும் நேரடி நியமனம் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மத்திய அரசு இந்த நேரடி நியமன முறையை இரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.