சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!

0
161

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது.

ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் புதிய தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் படிப்படியாக நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் இதன் காரணமாக ஒரு சில தடைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், அத்தியாவசிய தேவையை தவிர மக்கள் பொது வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருமணங்களில் பங்கேற்கும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.