Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேன்சர் அபாயம்.. உயிரை பறிக்கும் அஃப்லாடாக்சின் மிளகாய்!! இனிமேல் பார்த்து வாங்குங்க!!

நாம் உட்கொள்ளும் வேர்கடலை,சோளம் போன்ற பயிர்களில் வளரும் பூஞ்சைகளில் ஒன்றுதான் அஃப்லாடாக்சின்.இந்த அஃப்லாடாக்சின் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.

இந்த அஃப்லாடாக்சின் நாம் பயன்படுத்தும் மிளகாய்,ஜாதிக்காய் போன்றவற்றிலும் காணப்படுகிறது.நன்கு சிவந்த விதைகள் உள்ள வர மிளகாயை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.மிளகாயில் மஞ்சள் அல்லது கருப்பு நிற பூஞ்சை தென்பட்டால் அதனை வாங்கக் கூடாது.இந்த வகை மிளகாயில் உள்ள அஃப்லாடாக்சின் பூஞ்சை தொற்று நமது உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.

அஃப்லாடாக்சின் பூஞ்சை தொற்று நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.உங்களில் சிலர் மிளகாய் வற்றலை வாங்கி பொடியாக அரைத்து பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டிருப்பீர்கள்.இப்படி மிளகாய் வற்றல் வாங்கும் பொழுது நல்லவற்றை தேர்வு செய்ய வேண்டியது முக்கியம்.

ஒரு கிலோ மிளகாய் வற்றல் வாங்கினால் அதில் அரை கிலோ அளவிற்கு அஃப்லாடாக்சின் தொற்று ஏற்பட்ட மிளகாய் வந்துவிடுகிறது என்பது மக்களின் குமுறலாக இருக்கிறது.மிளகாய் மட்டுமின்றி ஜாதிக்காய்,வேர்க்கடலை,சோளம்,குச்சி கிழங்கு,கோதுமை போன்றகளிலும் அஃப்லாடாக்சின் பூஞ்சை தொற்று காணப்படுகிறது.

இந்த அஃப்லாடாக்சின் பூஞ்சை நிறைந்த பொருட்களை உட்கொண்டால் கல்லீரல் புற்றுநோய்,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு,பருவ கால பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.

அஃப்லாடாக்சின் நம் உடலில் சென்றால் என்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும்?

தோல் அரிப்பு
கல்லீரல் பாதிப்பு
உடல் சோர்வு
வயிற்று வலி
வாந்தி உணர்வு
பசியின்மை
வலிப்பு

அஃப்லாடாக்சின் அதிகம் உள்ள உணவுகள்:

சோளம்,அரிசி,கோதுமை,மிளகாய்,வேர்க்கடலை,மசாலா பொருட்களில் அஃப்லாடாக்சின் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.தற்பொழுது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் அஃப்லாடாக்சின் பூஞ்சை தொற்று இருப்பதாக ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.எனவே வாங்கும் பொருட்களில் பூஞ்சை,சொத்தல் போன்றவை இருந்தால் அவற்றை தவிர்த்துவிட வேண்டும்.

Exit mobile version