மனிதர்களை அச்சுறுத்தும் நோய் பாதிப்புகளில் ஒன்று புற்றுநோய்.இது பெரியவர்களுக்கு மட்டும் தான் வரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் கை குழந்தைகளுக்கும் இந்த நோய் பாதிப்புகள் வரக் கூடும்.
ஒவ்வொரு வருடமும் நான்கு லட்சத்திற்கு அதிகமான குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.குழந்தைகளுக்கு புற்றுநோய் வர முக்கிய காரணம் தாய்மார்கள் செய்யும் சில தவறுகள் தான் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பவுடரால் தான் இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
குழந்தைகள் மலம் சிறுநீர் போன்றவற்றை கழிப்பதால் அவர்கள் மீது ஒருவித வாசனை ஏற்படுகிறது.இதை போக்க குழந்தைகளை குளிப்பாட்டி பவுடர் போடுகின்றோம்.சிலர் குழந்தைகளை அழகாக வைத்துக் கொள்ள பவுடர் போட்டு பொட்டு வைத்து அலங்கரிப்பார்கள்.இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு பழக்கம் என்றாலும் குழந்தையை குளிப்பாட்டிய உடன் பவுடர் போட்டால் அதில் உள்ள கெமிக்கல்கள் சுவாசப் பாதை வழியாக நுரையீரலுக்கு சென்று புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும்.
பவுடரில் உள்ள மெக்னீசியம்,சிலிக்கான்,ஆக்சிஜன் போன்றவை ஈரப்பதத்தை உறிஞ்ச பயன்படுகிறது.குழந்தைகள் ,மீதுள்ள ஈரப்பதத்தை போக்கவும்,டயப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் ஈரப்பதத்தை போக்கவும் பவுடர் போடப்படுகிறது.
குழந்தைகளின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் அதிகளவு பவுடர் போடும் பழக்கம் இருந்தால் அதை விட்டுவிடுங்கள்.பவுடர் துகள்கள் சுவாசப் பாதை வழியாக சென்று நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கிவிடும்.