கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!

0
115
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அருமையாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கிறது.

வருமானம் உங்களின் திறமைக்கேற்ப வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் துணிவோடு செயல்படுவார்கள் கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேர்வதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.