ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் உணவுப் பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது.இதுபோன்ற காரணங்களால் இளம் வயதிலேயே புற்றுநோய் உண்டாகி வாழ்க்கையை இழக்கும் நிலைக்கு இளம் தலைமுறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர்.சமீப காலமாக பெண்கள் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
புற்றுநோயில் மார்பக புற்றுநோய்,கருப்பைவாய் புற்றுநோய்,தைராய்டு புற்றுநோய்,எண்டோமெட்ரியல் புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,கருப்பை புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கிறது.
எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும் சில அறிகுறிகள் பொதுவானதாக இருக்கும்.கீழே சொல்லப்படும் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
புற்றுநோய் வருவதற்கான முக்கிய அறிகுறிகள்:
1)உடல் எடை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக குறைந்தால் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
2)உடலில் வீக்கம் மற்றும் கட்டி உருவானால் அதை அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.வயிறு,மார்பகம்,அக்குள் போன்ற இடங்களில் கட்டிகள் உருவானால் அது புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
3)ஒரு மாதத்திற்க்கு மேலாக அதிகப்படியான இருமல் மற்றும் சளி இருந்தால் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.சளியுடன் கூடிய இரத்தம் வெளியேறுதல்,சுவாசிப்பதில் சிரமம் உண்டதால் போன்றவை நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கக்கூடும்.
4)நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தாலோ,சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வெளியேறினாலோ,வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேறினாலோ அது சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
5)காரணமின்றி அதிகப்படியான உடல் வலி இருந்தாலோ,எலும்பு மற்றும் நரம்புகளில் அதிகமான வலி இருந்தாலோ புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
6)தொடர்ந்து நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வயிறு புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
7)உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டாலோ,உணவுகள் தொண்டையில் சிக்கி கொள்வது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ அது தொண்டை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
8)இரவு நேரத்தில் காரணமின்றி அதிகப்படியான வியர்வை வெளியேறினால் அது லிம்போமா புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது.