குழந்தைகளை தாக்கும் அரியவகை புற்றுநோய்! ஒரே பள்ளியில் 100 மாணவர்களுக்கு பாதிப்பு!
கொரோனா தொற்றானது சீன நாட்டில் இருந்து உருமாறி அனைத்து நாடுகளையும் பெருமளவு தாக்கியது.அதன் தாக்கமே இன்று வரை முடிவரவில்லை.சிறார்களுக்கு தற்போது தான் தடுப்பூசி வரவழைக்கப்பட்டு நாடு முழுவதும் செலுத்தி வருகின்றனர்.மூன்றாவது கொரோனா அலையின் போது அதிகளவு பாதிப்புக்கள் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் 45 பேருக்கு கொரோனா தொற்றானது பாதித்துள்ளது.இந்த செய்தி வெளிவந்ததும் பெற்றோர் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.மாணவர்களுக்கு ஓர் பக்கம் தடுப்பூசி செலுத்திவந்த நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
இவ்வாறு இருக்கும் நிலையில் அமெரிக்காவில் ஓர் பள்ளியில் முன்னால் மாணவர்கள்ஆசிரியர்கள் என 100 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.இந்த பள்ளியின் முன்னால் மாணவர் அல் லுபியானோ என்பவருக்கு இந்த அரியவகை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.அதனையடுத்து இவரது சக மாணவர்களும் அந்த அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது இந்த மாணவர் பல பாதிப்பை தாண்டி அந்த புற்றுநோயிலிருந்து வெளிவந்துள்ளார்.இவ்வாறு இருக்கையில் இந்த புற்றுநோயால் இவரது மனைவி மற்றும் சகோதரி இருவரும் உயிரிழந்துள்ளார்.
இந்த அரியவகை புற்று நோய் லட்சத்தில் 3 பேருக்கு தான் வரக்கூடியது.அனால் எப்படி ஒரே பள்ளியை சேர்ந்த அனைவருக்கும் வர முடியும் என்று அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இதனை கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.இவ்வாறு இருக்கையில் அதனை கண்டறியும் படி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.அதனால் அந்த பள்ளியின் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் ரேடியாலஜி சோதனைக்கு உட்படுத்தும் படி கூறியுள்ளனர்.ஏனென்றால் ரேடான் வாயு அங்கு காணப்பட்டால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.அதனால் தற்போது அங்கு அந்த சோதனை செய்ய உள்ளனர்.