Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் பொறுப்புணர்ச்சி தேவைப்படும் உங்களுக்கு நாள்!!

கடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் பொறுப்புணர்ச்சி தேவைப்படும் உங்களுக்கு நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி தேவைப்படும் நாள். எந்த ஒரு காரியத்தையும் எடுக்கும் பொழுது கவனத்தை சிதற விடாமல் கவனமாக செய்வது நல்லது. குடும்ப உறவு பக்கபலமாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் கவலை கொள்ள தேவையில்லை.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் நிமித்தமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் புது விதமாக சிந்திப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு கடமை உணர்ச்சி அதிகமாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு நாட்டு மருத்துவத்தை நாடுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் அதிக முன்னேற்றம் காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு கடமை உணர்ச்சி மேலோங்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version