உடலில் உருவாகும் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய்(கேன்சர்).புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கின்றது.இது புற்றுநோய் செல்கள் உருகவாகும் இடத்தை பொறுத்து மாறுபடும்.
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கிமற்ற வாழ்க்கைமுறையால் கொடிய நோய்கள் கூட எளிதில் தொற்றிவிடுகிறது.அதிக உயிரிழப்பு ஏற்படுத்தும் நோய்களில் இதய நோய்க்கு அடுத்து புற்றுநோய் உள்ளது.
இந்நிலையில் புற்றுநோய் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.அதாவது உயரமானவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.அதிக உரயமான ஆண்கள் மற்றும் பெண்களிடையே புற்றுநோய் அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் உயரம் அதிகமாக இருப்பவர்கள் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.
உயரம் அதிகமாக இருப்பவர்களை குறிவைக்கும் புற்றுநோய்கள்:
1) கணைய புற்றுநோய்
2) கருப்பை புற்றுநோய்
3)பெருங்குடல் புற்றுநோய்
4)எண்டோமெட்ரியம் புற்றுநோய்
5)புரோஸ்டேட் புற்றுநோய்
6)சிறுநீரக புற்றுநோய்
7)தோல் புற்றுநோய்
8)மார்பக புற்றுநோய்
உயரம் அதிகமாக இருப்பவர்களுக்கு உடலில் ஹார்மோன்கள் அதிகளவில் இருக்கிறது.இந்த ஹார்மோன்கள் உடலில் செல்களின் வளர்ச்சி ஊக்குவிக்க வாய்ப்பிருப்பதால் புற்றுநோய் உருவாக அதிக வாய்ப்பிருக்கிறது.அதேபோல் உயரமானவர்களின் உடலில் மரபணு மாற்றம் ஏற்படுகிறது.இதனால் சில புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
புற்றுநோய் வராமல் இருக்க செய்ய வேண்டியவை:
1)உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.ஊட்டச்சத்து,தாதுக்கள்,வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
2)ஆரோக்கியமான வழியில் உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
3)யோகா,தியானம்,உடற்பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வர வேண்டும்.
4)மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.