சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியல் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் அதிமுகவும் அதனுடைய வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலையில் துரிதமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
ஐ பேக் நிறுவனத்துடைய ஆய்வின் அடிப்படையிலேயே திமுக சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டார் தொகுதிவாரியாக யார் யார் வேட்பாளர்கள் என்று மாவட்டச் செயலாளர்கள் இடம் திமுக தலைமை தெரிவித்து விட்டது இந்த தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதுடன் இப்போது முதலே வேட்பாளர்கள் யார் என்று கட்சிக்காரர்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் படியும் உத்தரவு போடப்பட்டிருக்கிறது அத்தோடு பொங்கல் பண்டிகையோடு ஸ்டாலின் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருக்கின்றார்.
அப் பிரச்சாரங்களின் தூது ஒவ்வொரு தொகுதியாக இறுதி செய்யப்பட்டு இருக்கின்ற வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாவட்ட செயலாளர்களுக்கு திமுகவின் தலைமை உத்தரவிட்டிருக்கிறது இவ்வாறு திமுக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக இறங்கி வரும் அதே நேரத்தில் ஆளும் தரப்பிலும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கிறார்கள் அதிமுகவைப் பொறுத்தவரையில் சென்ற காலங்களில் மாவட்ட செயலாளர்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஜெயலலிதா ஒருவரை நேர்காணல் செய்வார்.
அதே பாணியில் மாவட்டச் செயலாளர்கள் இடம் தொகுதிவாரியாக தகுதியான வேட்பாளர்களை தேர்வு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது கிட்டத்தட்ட பாதி மாவட்டச் செயலாளர்கள் தங்களுடைய தொகுதிக்கான வேட்பாளர்கள் என ஒரு பட்டியலை அதிமுகவின் தலைமைக்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த பட்டியலை வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் இரவு பகலாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கிறார்கள் மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை செய்துள்ள நபர் யார் எத்தனை வருடங்களாக கட்சியில் இருக்கின்றார் இதற்கு முன்பு வேறு கட்சியில் இருந்து இருக்கின்றாரா என்பதை எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக ஆய்வு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
அத்துடன் மட்டும் அல்லாமல் இப்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் பலரை மாவட்ட செயலாளர்கள் தற்போதைய பரிந்துரையில் சேர்க்கவில்லை என்று சொல்கிறார்கள் அதற்கான காரணத்தை மாவட்டச் செயலாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு எடப்பாடி விசாரணை செய்வதாகும் தெரிவிக்கிறார்கள் அதோடு மாவட்டச் செயலாளர்கள் தெரிவிக்கும் காரணம் உண்மைதானா என்று உளவுத்துறை மூலமாக எடப்பாடி கள ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கிறார்கள் இதன் அடிப்படையில் வட மாவட்டங்களில் கிட்டதட்ட வேட்பாளர்களின் பட்டியலில் எடப்பாடி ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
வேட்பாளர் தேர்வில் வேறு யாரையும் நம்பாமல் அவரே நேரடியாக களம் இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள் இப்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவருடைய தீர்க்கமான முடிவாக இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள் அதனடிப்படையில் கிட்டத்தட்ட நூறு தொகுதிகளுக்கு இப்போதைய எம்எல்ஏக்களை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் அவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கின்ற உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.