தேர்வர்களுக்கு அதிர்ச்சி!பொங்கல் பண்டிகை அன்று தேர்வு! 

0
215

தேர்வர்களுக்கு அதிர்ச்சி! பொங்கல் பண்டிகை அன்று தேர்வு!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்று வங்கியின் முதன்மை தேர்வு நடைபெறுவதால் தேர்வர்கள் கவலை கொண்டுள்ளனர்.

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் போஸ்ட்டுக்கான முதன்மைத் தேர்வினை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்று நடத்துவதாக அறிவித்துள்ளது இதனை கேட்டு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதன்மை தேர்வினை வேறொரு நாளில் மாற்றி வைக்குமாறு பரிசீலனை செய்து வருகின்றனர்.

நாட்டின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரதான வங்கி பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கிகளில் காலியாக உள்ள 5008  இடங்களுக்கான  பணிக்கான முதல் நிலை தேர்வுகள் சென்னை உட்பட நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை அடுத்து முதன்மை தேர்வு ஜனவரி 15ஆம் நாள் பொங்கல் அன்று நடைபெறுவதாக சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதனிடையே தமிழர்களின் விழாவான பொங்கல் அன்று தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டில் விடுமுறை நாளில் பொங்கல் பண்டிகை வருகிறது அதனை கவனிக்காமல் தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை அன்று  பொங்கல் கொண்டாடும் மனநிலையில் இருப்பதால் தேர்வு எழுதுவதில் சிரமங்கள் ஏற்படும். எனவே ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் தேர்வினை வேறு ஒரு நாளில் தள்ளி வைக்குமாறு தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்களின் கோரிக்கையை வங்கி தேர்வு நடத்துபவர்கள் பரிசீலனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.