தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது! உயர் நீதிமன்றம் உத்தரவு!

0
113

தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது! உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை பொறியாளரான எஸ் பாலசுப்ரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ” அவரது மகன் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதியுள்ளான் எனவும் அதில் 11 வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை 24ஆம் தேதி தொடங்கப்படும் என்பதனால் மற்ற மாணவர்களின் முடிவுகளை போலவே தனித்தேர்வு எழுதிய மாணவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.

இந்த பாரபட்சங்கள் மாணவர்களின் ஒரு ஆண்டு கல்வியை பாதிக்கும் எனவும்,இல்லையெனில் தனி தேர்வாளர்களின் தேர்ச்சி அறிவிக்கப்பட்ட பின் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையையும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கையையும் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மற்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த நிலையில் அதேபோல் தனி தேர்வாளர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 22ம்தேதி தனித்தேர்வர்களுக்கு பொதுதேர்வு தொடங்க உள்ளது எனவும், ஒரு வாரத்தில் தேர்வு முடிந்து, அக்டோபர் 2ம் வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகிவிடும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.