Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க! 

பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க!

நம்மிலும் பலருக்கு சைனஸ் பிரச்சனை காணப்படும். பிரச்சனை பாக்டீரியா மற்றும் அதன் தொற்றுகளால் உண்டாகும். இதனால் அடிக்கடி சளி இருமல் தும்மல் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுவர். மேலும் பலருக்கு முகம் வீக்கம் அடையும், தலை பாரமாகவே காணப்படும். வெதுவெதுப்பான நீரில் ஆவி பிடிப்பது இவ்வாறு செய்வதால் தலைபாரம் குறையும்.

அவ்வாறு ஆவி பிடிக்கும் பொழுது யூகாலிப்டஸ் எண்ணெய் இரண்டு சொட்டு சேர்த்து ஆவி பிடிக்க வேண்டும். இந்த எண்ணையானது சுவாச பாதையில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. இது சைனஸிற்கு நல்ல தீர்வை கொடுக்கும். நமது மூச்சுப் பாதையில் தொற்று இருந்தால் தான் இந்த சைனஸ் பிரச்சனை ஆரம்பமாகிறது. அதற்கு இன்னொரு தீர்வு ஜலநெட்டி. ஜெனலிட்டி என்ற பொருள் ஆன்லைன் மார்க்கெட்டில் கிடைக்கும்.

இதில் வெதுவெதுப்பான தன் சுடு தண்ணீர் ஊற்றி அத்துடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து மூக்கின் வழியே விட வேண்டும். இவ்வாறு செய்வதால் கிருமிகள் அழியும். அதிக உடல் சூடு இருப்பவருக்கும் சைனஸ் பிரச்சனை காணப்படும். அதனால் வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அவ்வாறு தேய்க்கும் பொழுது நல்லெண்ணெயுடன் நொச்சி இலையை காய்த்து தேய்த்து குளிக்க வேண்டும். இவர் குளித்து வருவதால் தலையில் நீர் கோர்ப்பது தடுக்கப்படும்.

அதேபோல மலச்சிக்கல் அஜீரணம் கோளாறு உள்ளவர்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும். தினம்தோறும் தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீக்க உதவும். இதையெல்லாம் தாண்டி உணவு முறைகளிலும் சிறிது கவனமாக இருக்க வேண்டும். சளியை உண்டாக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது.

Exit mobile version