Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது! மாட்டினால் ஜெயில் தான்!

Can't run and can't run! Otherwise it's jail!

Can't run and can't run! Otherwise it's jail!

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது! மாட்டினால் ஜெயில் தான்!

தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.மக்கள் நலனுக்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி  வருகிறது.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு,அரசியல் தலைவர்கள் மக்களுக்கு முன் உதாரமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வலியுறுத்தி வருகின்றனர்.

தடுப்பூசி செலுத்தி வந்தாலும் தற்போது செலுத்தியவர்களுக்கே கொரோனா தொற்று பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் கொரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டு வருகிறது.தற்போது மகாராஷ்டிராவில் அதிக அளவு கொரோனா தொற்று உள்ளதால் அங்கு 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

அதற்கடுத்ததாக டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதால் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் தமிழ்நாட்டிலும் அதிக அளவு கொரோனா பரவி வருகிறது.ஓர் நாளில் மட்டும் 1,250  பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகி வருகிறது.இந்நிலையில் மற்ற மாநிலங்களை போலவே தமிழ்நாட்டிற்கும் ஊரடங்கு போடப்படும் என அனைவரு பேசி வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசு திட்டவட்டமாக முழு ஊரடங்கு போடப்படாது என கூறி வருகிறது அந்தவககையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது,கொரோனா தொற்று பரவினாலும் அதை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுமே தவிர ஊரடங்கு போடப்படாது என கூறினார்.ஆனால் ஊரடங்கு போடப்படும் என பேச்சுக்கள் பேசப்பட்டு வருகின்றனர்.அதை பேசுவதுடன் விட்டு விடாமல் பல தவறான செய்திகளை வதந்திகளாக பரப்பி வருகின்றனர்.அதனால் மக்கள் ஊரடங்கு போடப்படும் என அச்சத்தில் உள்ளனர்.இதனைத்தடுக்க அரசாங்கம் அவ்வாறு தவறான வதந்திகள் பரப்புபவரை ஸைபர் கிரைம் மூலம் கண்டுபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.மக்கள் யாரும் ஊரடங்கு எனக் கூறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்

Exit mobile version