தூக்கம் வரவில்லையா? இத செய்தால் போதும்!!

0
270
#image_title

தூக்கம் என்பது இன்றியமையாதது. 8 மணி தூக்கம் தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இன்றைய சூழ்நிலையில் யாரும் சரியாக தூங்குவதில்லை.

இரவு நேர பணிகள், நீண்ட நேரம் செல்போன் மற்றும் டிவி பார்ப்பது, மன அழுத்தம், சிறிய பிரச்சினைகளையும் பெரிதாக யோசித்து கொண்டே இருப்பது போன்றவை தூக்கமின்மைக்கான காரணிகளாகும். அதே போல் நாம் படுக்கும் இடம் கூட தூக்கமின்மைக்கு காரணமாகும்.

நாம் தூங்கும் இடம், அதிக சத்தமாக இருத்தல், அதிக வெளிச்சமாக இருத்தல், அதிக குளிர்ச்சியாக இருத்தல் போன்ற காரணங்களும் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

தூக்கமின்மைக்காக, ஒரு சிலர் மருந்துகளை உட்கொள்கின்றனர். இன்றைக்கு இந்த மருந்துகளால் தூக்கம் வந்தாலும் பின் நாட்களில் இதனால் ஏற்படும் பக்க விளைவுகளே அதிகம். படுத்தவுடன் தூக்கம் வருவதற்கு ஒரு சிறிய வழிமுறைகளை பார்க்கலாம்.

1 டேபிள் ஸ்பூன் சீரகத்தை எடுத்துக் கொள்ளவும். அதை லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். வறுத்து அரைத்த இந்த பொடியை சிறிதளவு எடுத்து வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட நன்றாக தூக்கம் வரும். இது எளிய வீட்டு முறை வைத்தியம் . எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாதது.