பல் கூச்சத்தை பொறுத்துக் கொள்ள முடியலையா? இதை ஒரு முறை செய்தாலே முழுமையான பலன் கிடைத்து விடும்!!

0
237
Can't stand toothache? Do this once and you will get complete results!!

பல் கூச்சத்தை பொறுத்துக் கொள்ள முடியலையா? இதை ஒரு முறை செய்தாலே முழுமையான பலன் கிடைத்து விடும்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல் தொடர்பான பாதிப்பதால் அவதியடைந்து வருகின்றனர்.பற்கள் வலிமையாக இருப்பது மிகவும் முக்கியம்.பல் அதன் வலிமையை இழந்தால் விரைவில் பற்களை இழக்க நேரிடும்.

பல் கூச்சத்தால் எந்த ஒரு உணவையும் திருப்த்தியாக சாப்பிட முடியாது.குளிர்ந்த உணவுகள்,சூடான உணவுகள்,புளிப்பு மற்றும் இனிப்பு உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவது எளிதற்ற ஒன்றாக மாறி விடும்.

என்வே பற்களை வலிமையாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:

1)கொய்யா இலை
2)தேங்காய் எண்ணெய்

இரண்டு கொய்யா இலையை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு கிண்ணத்தில் கொட்டி சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.பல் கூச்சத்தை போக்க கூடிய மருந்து தயார்.

இந்த கொய்யா இலை பேஸ்டை பயன்படுத்தி பற்களை துலக்கவும்.இவ்வாறு ஒருமுறை செய்தாலே பல் கூச்சத்தில் இருந்து ரிலீஃப் கிடைக்கும்.

தீர்வு 02:

1)தயிர்

ஒரு ஸ்பூன் தயிரை பயன்படுத்தி பற்களை துலக்கி வந்தால் பல் கூச்ச பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 03:

1)பூண்டு பல்
2)கல் உப்பு

இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கி உரலில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிது கல் உப்பு சேர்த்து இடிக்கவும்.

இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி பற்களை துலக்கினால் பல் கூச்சம் முழுமையாக நீங்கும்.

தீர்வு 04:

1)சின்ன வெங்காயம்

ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.இதை வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.இவ்வாறு செய்வதினால் பல் கூச்சம் முழுமையாக நீங்கும்.

தீர்வு 05:

1)கல் உப்பு
2)வெந்நீர்

ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து வாயை கொப்பளித்தால் பல் கூச்சத்திற்கு தீர்வு கிடைக்கும்.