Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

"இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாதது" என் எல்சி க்கு சவால் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

"இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாதது" என் எல்சி க்கு சவால் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

புதுச்சேரியில் இன்று பாமக புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் ஒட்டுமொத்த கட்சிகளுக்கு இடையே ஓர் ஆய்வு ஒன்றை நடத்திய பொழுது அதிக அளவு இளைஞர்கள் கொண்ட கட்சியாக பாமக திகழ்கிறது என தெரியவந்துள்ளது.

அதேபோல மக்களின் வளர்ச்சி தான் ஒரு கட்சியின் மிகப்பெரிய வெற்றி. அந்த வகையில் தமிழக மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல திட்டங்கள் கொண்டு வருவதற்கு பாமக ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. அந்த வகையில் சமச்சீர் கல்வி திட்டம், இட ஒதுக்கீடு, 108 ஆம்புலன்ஸ் திட்டம், லாட்டரி தடை சட்டம் என ஒவ்வொன்றும் பாமக வலியுறுத்தி கிடைத்த வெற்றியே என்று கூறினார்.

மேலும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் மிகப்பெரிய திட்டங்கள் கொண்டு வருவதற்கு கட்டாயம் பதவி என்பது முக்கியமான ஒன்றாக அமைகிறது. அந்த வகையில் பல கட்சிகள் தங்களின் விளம்பரத்திற்காகவே அரசியல் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி  தற்பொழுது இருக்கும் அரசியல் சூழலில் பல கட்சிகள் என்ன செய்கிறது என்பதை நாம் ஊடகம் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டிய உள்ளது.

மக்களின் தேவைகளை புரிந்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்காமல் ஒருவர் அடுக்குமொழியின் வசனங்கள் பேசியும், மற்றொருவர் நான் இவ்வளவு விலையில் வாட்ச் அணிந்து இருக்கிறேன் என்று விளம்பரம் செய்வதையே குறியாக வைத்துள்ளனர்.

பல நலத்திட்டங்கள் கொண்டு வருவதற்கு பாமக முக்கிய காரணமாக இருப்பதால் தமிழக மக்களுக்கு நம்மளை விட்டு வேறு வழி இல்லை என்று கூறினார்.

தற்பொழுது அதிமுக நான்காக பிளவுப்பட்டுள்ளது. மேலும் ஆளும் கட்சி மீதும் பல குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணமாக உள்ளது. நாம் எடுக்கும் கட்சியின் கொள்கைகள் எத்தனை மக்களை சென்றடைகிறது என்பதை எண்ண வேண்டுமே தவிர எத்தனை கொள்கைகளை கூறுகிறோம் என்பது முக்கியமல்ல.

இதர பிரிவினர் போல் நமக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதே தலையாய நோக்கமாக உள்ளது. அந்த வகையில் நாம் 20 விழுக்காடு கேட்ட பொழுது கூட வெறும் 10.5 விழுக்காடு தான் நமக்கென்று கொடுத்தார்கள். பின்பு அதனையும் விடாமல் நம்மிடம் இருந்து அதனை ரத்து செய்து விட்டார்கள்.

மீண்டும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகிறார். மேலும் என்எல்சி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு  அதற்கான நிலமெடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதை ஒரு பொழுதும் பாமக ஒப்புக்கொள்ளாது. இங்கிருந்து ஒரு படி மண் கூட எடுக்க விடமாட்டோம் என்று பேசி 18 தீர்மானங்கள் நிறைவேற்றி உத்தரவிட்டனர்.

Exit mobile version