Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகக் கவசம் இல்லை எனில் பயணம் செய்ய முடியாது?

விமானத்தில் செல்வோர் முகக் கவசம் அணிய மறுத்தால், அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா சூழலில், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, பயணிகள் முகக் கவசம் அணிவது முக்கியம் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது. மிகப் பெரும்பாலான பயணிகள், அதன் அவசியத்தை உணர்ந்து தவறாமல் அதைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அண்மையில் பயணிகளில் சிலர் முகக் கவசம் அணிய மறுத்து விமானப் பணியாளர்களோடு பூசலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாயின.

மிகச் சிலரது அலட்சியப் போக்கால், மற்ற பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடுமென அமைப்பு கூறியது. முகக் கவசம் அணிவதை முக்கியப் பரிந்துரைகளில் ஒன்றாக, அனைத்துலக சிவில் விமானத்துறை அமைப்பு பட்டியலிட்டுள்ளது. அவர்களுக்கு தேசியச் சட்டத்தின்கீழ் தண்டனையும் விதிக்கப்படலாம்.

Exit mobile version