இனி வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது! எச்சரிக்கை விடுத்த தேர்வாணையம்!
சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்தவகையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு பல முறைகளில் வேலைகளை பெற்று தருகிறது.இப்பொழுது டி என் டிஆர்பி தேர்வு நடைபெற உள்ளது.இதுபோல் ஒவ்வொரு முறை தேர்வு நடைபெறும் பொழுதும் தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேடுகளில் மாட்டிக் கொள்கின்றனர்.அவர் மாட்டிக் கொள்பவர்கள் சில தண்டனை அனுபவித்து விட்டு மீண்டும் அதே தவறை செய்கின்றனர்.இம்முறை அதனையெல்லாம் தடுக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் அவர்கள் கூறியதாவது, தற்பொழுது அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ,உடற்கல்வி இயக்குனர் ,கணினி ஆசிரியர் என 2207 பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்த பணியிடங்களில் 247 காலியிடங்கள் உள்ளன.புதிதாக நியமிப்பவர்களின் பணியிடங்கள் 1960 ஆக உள்ளது.தற்பொழுது இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த பணிக்கான தேர்வில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை தற்போது ஆரம்பித்துள்ளது.இந்த ஆசிரியர் பணிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் மாதம் 13 ,14 மற்றும் 15ம் தேதிகளில் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.
இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவேற்ற கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் போட்டியாளர்கள் ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம் என கூறியுள்ளனர்.மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடு செய்பவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது என்ற அளவுக்கு தடை விதிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.மேற்கொண்டு கூறியதாவது, கணினி வழியில் தேர்வு எழுத ஒவ்வொருவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் கடுமையான நோயால் பாதித்தவர்கள் அதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் அவர்கள் உள்ள இடத்திற்கு அருகாமையில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என கூறியுள்ளனர்.
தேர்வு மையம் அமையும் மாவட்டம் குறித்த விவரங்கள் ஏழு நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.அதேபோல தேர்வு மைய விவரம் தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டுகள் அனைத்தும் இணைய வழியில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். போதுமான அளவு கட்-ஆப் மதிப்பெண் இருந்தும் ஆசிரியர் பணிக்கான உரிய கல்வி தகுதி இல்லை என்றால் விண்ணப்பித்த படிவம் நிராகரிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
நோய்த்தொற்று போன்ற காரணங்களுக்காக தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு தள்ளி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ வாரியத்துக்கு முழு உரிமை உள்ளது என்று கூறியுள்ளனர்.அதேபோல தேர்வு மையங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.அவ்வாறு நடவடிக்கை எடுப்பவர்கள் மீது 5 முதல் 7 ஆண்டுகள் வரை எந்த தேர்வும் எழுத முடியாத வகையில் தடை விதிக்கப்படும்.அதுமட்டுமின்றி அவர்கள் மீது ஆயுட்கால தடையும் விதிக்க முடியும் என்று எச்சரித்துள்ளனர்.