Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகரம் சனி பெயர்ச்சி பலன்கள் 2025..!! இரண்டு விஷயங்களில் கவனம் தேவை..!!

இந்த வருடம் சனி பகவான் மகரம் ராசிக்கு மூன்றாவது இடத்திற்கு வருகிறார். இதனால் ஏற்படக்கூடிய நற்பலன்கள் என்ன, என்ற கேள்வி நமக்குள் பலருக்கும் இருக்கும். அதற்கான விளக்கத்தை தான் தற்போது காணப்போகிறோம். ஏதேனும் ஒரு பெயர்ச்சியோ அல்லது கிரகங்களின் மாற்றங்களோ ஏற்பட்டால், நமது மனதில் உடனேயே இந்த மாற்றம் நமக்கு பணவரவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை தான் முன்னிலையில் வைத்து பார்க்கிறோம்.

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சனி பகவான் வருவது என்பது விதைப்பதற்கான நேரம் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் நாம் செய்யக்கூடிய முயற்சிகளை சனி பகவான் ஊக்குவிப்பார். மேலும் ஏழரை சனியும் முடிவடைய போகிறது. சனிபகவான் நமது ராசியில் வருவது என்பது நமது நன்மைக்கே என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் இந்த ஏழரை சனி நடந்து கொண்டிருந்த வேளையில் நிறைய முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டு இருப்பீர்கள், அதில் வெற்றியும் கண்டு இருப்பீர்கள். ஏனென்றால் இந்த சனி பகவான் அந்த அளவிற்கு நம்மை பாடு படுத்தி, அந்த வேலையை செய்ய வைத்திருப்பார்.

ஆனால் சனி பகவான் இப்பொழுது மூன்றாம் இடத்திற்கு வரும்பொழுது இரண்டு விதமான பிரச்சனைகளை தருவார். அதில் ஒன்றுதான் தேவை இல்லாத எண்ணங்கள் உருவாவது. இரண்டாவது அதிகப்படியான கற்பனைகள். நமது வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை நாம் ஒரு விதத்தில் யோசித்து வைத்திருப்போம், ஆனால் அதுபடி நடக்காது. எனவேதான் தேவை இல்லாததை யோசிப்பதை விட்டுவிட்டு இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் யோசித்து வாழ்க்கையை செயல்படுத்த வேண்டும்.

இவர்களது வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. ஆனால் ஏற்படுவதற்கு முன்பாகவே ஒரு வேலை இவ்வாறு ஆகிவிடுமோ! அல்லது அவ்வாறு ஆகிவிடுமோ! என்று தேவையில்லாத மனக்குழப்பத்தை மகரம் ராசியினர் கொண்டிருப்பர். இந்த தேவையில்லாத மனக்குழப்பத்தை தான் மகரம் ராசியினர் விட வேண்டும். மேலும் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.

இந்த சனி பெயர்ச்சி மகரம் ராசியினருக்கு சகோதர உறவுகளால் நன்மைகள் ஏற்படும். வீடு, நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

Exit mobile version