மகரம் ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.
வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கவனம் அவசியம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுப்போடு நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த காலதாமதங்கள் விலகும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை பற்றி யோசிப்பீர்கள்.
மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகளை காண்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்