மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! நிதி அனுகூலமாக உள்ள நாள்!
மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சுப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சொத்து சேர்க்கை மற்றும் பயணம் உண்டாகும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். மாலையில் பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சந்திர பகவான் வருவதால் நன்மைகள் வந்து சேரலாம். நிதி அனுகூலமாக உள்ளது.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்கும் என்றாலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உபயோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.
உபயோகத்தில் உள்ள பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் கலைகட்டி இருப்பதைக் கண்டு சந்தோஷமாக காணப்படுவார்கள்.
நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறை சேர்ந்த கலைஞர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.