மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள்!
]மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள். குடும்ப உறவுகளில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சில பிரச்சனைகள் தீரும்.
பொருளாதாரம் சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த வேலை பளு குறையும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.
அரசியலில் இருக்கும் அன்பர்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான பாதைக்கு வருவார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் காரியம் அருமையாக செயல்படும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.
மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் சந்தோஷ சூழ்நிலையை காண்பார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.