மகரம் – இன்றைய ராசிபலன்! நிதானத்துடன் செயல்படும் நாள்!!
மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமுடன் இருக்க வேண்டிய நாள். எந்த ஒரு காரியத்தையும் எடுக்கும் முன் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நிதி நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு கிடைக்காது.
கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் கண்டிப்பாக வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் பொறுமையாக செயல்படுவது நல்லது.
உத்தியோகத்தில் உள்ள பெண்கள் எடுக்கும் காரியங்களில் சற்று இழுபறிகிறது என்ற கவலையுடன் செயல்படுவார்கள். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.
நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் எழலாம் என்பதால் கூடுமானவரை அவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். அரசியல்வாதிகள் குழப்பமுடன் செயல்படுவார்கள். கைத்தொழியை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.