Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேப்டன் விஜயகாந்த காலமானார்..!! பேரதிர்ச்சியில் தொண்டர்கள்!

#image_title

கேப்டன் விஜயகாந்த காலமானார்..!! பேரதிர்ச்சியில் தொண்டர்கள்!

தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த்(வயது 71) அவர்கள் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் அவர்கள் சுவாச பிரச்சனையால் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் தொடர் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

விஜயகாந்த்தின் இறப்பு தமிழ் திரையுலகினர், தொண்டர்கள், ரசிகர்கள் என்று அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயகாந்த உடலை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன்பு குவிந்து இருக்கின்றனர்.

இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அவரது இல்லம் மற்றும் தேமுதிக அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. விஜயகாந்த் மறைவால் தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இருக்கிறது.

Exit mobile version