Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்!

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்!

சென்னை ஓஎம்ஆர் துரைப்பாக்கம் சர்வீஸ் ரோட்டில் அதிவேகமாக வந்த கார் ஒன்று,எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில்,பெண் உட்பட இரண்டு நபர்கள் தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த ஒன்பதாம் தேதி அன்று,இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து தூக்கி வீசப்பட்டவர்கள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இருந்தபோதிலும் அந்த காரை ஓட்டி வந்த துரைப்பாக்கத்தில் சேர்ந்த 62 வயது நபரிடம்,காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அந்த விசாரணையின் போது,ஏற்கனவே வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது,இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியதால்,மக்கள் பார்த்தால் தாக்கி விடுவார்கள் என்ற பயத்தில் மேலும் காரை அதிவேகமாக ஓட்டி வந்து இந்த விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து,அவர் ஓட்டி வந்த காரையும் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Exit mobile version