அவர்களுக்கு கார்.. அனிருத்துக்கு? தொடரும் கலாநிதி மாறனின் பரிசு மழை!!

0
104

அவர்களுக்கு கார்.. அனிருத்துக்கு? தொடரும் கலாநிதி மாறனின் பரிசு மழை!!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 10 அன்று வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவா நடித்த இப்படத்தில் மோகன்லால்,சிவராஜ்குமார்,ரம்யா கிருஷ்ணன்,வசந்த் ரவி,விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

திரையரங்குகளில் வெளியான இப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்று இந்திய சினிமா துறையில் வசூல் சாதனை படைத்துள்ளது.படம் வெளியாகிய நாள் முதல் இன்று வரை சுமார் 600 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தற்பொழுது பரிசு வழங்கி வருகிறார்.முன்னதாக ஜெயிலர் படத்தின் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு BMW X7 என்ற மிகவும் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார்.அதனை தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் நெல்சன் அவர்களுக்கு ‘செக்’ ஒன்றை வழங்கியதோடு Porsche காரை பரிசாக கொடுத்தார்.ரஜினி மற்றும் நெல்சன் ஆகிய இருவருக்கும் வழங்கிய காரின் விலை இந்திய மதிப்பின்படி சுமார் 1.40 கோடிக்கும் மேல் இருக்குமென்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது கலாநிதி மாறன் இப்படத்தின் இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் அவர்களுக்கு காசோலை ஒன்றை வழங்கி இருக்கிறார்.ரஜினி மற்றும் நெல்சனுக்கு கார் வழங்கியதைப்போல் அனிருத்துக்கும் கலாநிதி மாறன் விலை உயர்ந்த காரை கிப்டாக வழங்குவார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.