கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை !
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவர் தஞ்சை மாவட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரதின் நண்பர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் கோபிநாத். இவர்கள் மூவரும் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்ளை கோபிநாத் இயக்கினார்.
இதனையடுத்து இவர்கள் மூவரும் அற்புதபுரம் சோதனை சாவடி அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் அடித்து விட்டு புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தானர்.அப்போது அதே சாலையில் எதிரில் வல்லம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மாதவன் என்பவர் அவரதின் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்தார்.அந்த ஸ்கூட்டரை புதுக்கோட்டை கட்டியா வயலில் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் ஓட்டிவந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த கார் ஆனது எதிர்பாராத விதமாக மாதவன் இயக்கி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. மேலும் கல்லூரி மாணவர்கள் வந்த மோட்டர் சைக்கிளின் மீதும் மோதியது.இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்த மாதவன் ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். அதில் பலத்த காயம் ஏற்பட்டது.இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்கள் அனைவரையும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாதவன் சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.