Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Cardiac Arrest Vs Heart Attack: இதய செயலிழப்பிற்கும் மாரடைப்பிற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா!!

Cardiac Arrest Vs Heart Attack: Know the Difference Between Cardiac Arrest and Heart Attack!!

Cardiac Arrest Vs Heart Attack: Know the Difference Between Cardiac Arrest and Heart Attack!!

இக்காலத்தில் இதயம் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து கொண்டிருக்கிறது.ஹார்ட் அட்டாக்(மாரடைப்பு),கார்டியாக் அரஸ்ட்(இதய செயலிழப்பு),இருதய பிரச்சனை போன்றவை இதய நோய்களாகும்.

இதய நோய் என்றால் மாரடைப்பு தான் என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் கார்டியாக் அரஸ்ட்டும் மாரடைப்பின் அறிகுறியையே ஒத்திருக்கிறது.

சமீப காலமாக கார்டியாக் அரஸ்ட் மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.இதய துடிப்பு முழுமையாக நின்று உடலில் ஒட்டுமொத்த உறுப்புகளும் இயக்கத்தை இழப்பதை கார்டியாக் அரஸ்ட் என்பார்கள்.இதய துடிப்பு சீரற்று இருந்தால் கார்டியாக் அரஸ்ட் ஏற்படும்.நமது இந்தியாவில் 40 வயதிற்குள் உள்ளவர்களில் 25% பேர் மாரடைப்பிற்கு ஆளாகிறார்கள்.

கார்டியாக் அரஸ்ட் ஏற்பட காரணங்கள்:

1)மரபணு
2)இரத்த குழாய் அடைப்பு
3)போதைப்பொருள் பயன்படுத்துதல்
4)உடல் உபாதைகள்

அறிகுறிகள்:

1)மூச்சு திணறல்
2)அதிகமாக வியர்த்தல்
3)சீரற்ற இதய துடிப்பு
4)நெஞ்சு படபடப்பு

அதேபோல் திடீரென்று இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு உண்டாகிறது.இதனால் மயக்கம்,மூச்சுப்பிடிப்பு,வியர்த்தல்,சீரற்ற இதய துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

உங்களுக்கு நாட்பட்ட நெஞ்சடைப்பு பாதிப்பு இருந்தால் மூச்சு வாங்குதல்,இடது மார்பில் அதிகமான வலி,அதிக படபடப்பு,நெஞ்சு பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மாரடைப்பு ஏற்பட காரணங்கள்:

1)இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாதல்
2)உடல் பருமன்
3)இரத்த குழாயில் அடைப்பு

அறிகுறிகள்:

1)நெஞ்செரிச்சல்
2)மூச்சு திணறல்
3)வியர்த்தல்
4)மயக்கம்
5)தலைசுற்றல்
6)தலைவலி
7)குமட்டல்
8)அஜீரணப் பிரச்சனை
9)மார்பு பகுதியில் வலி

மாரடைப்பு,இதய செயலிழப்பு போன்ற எந்த ஒரு இதயப் பிரச்சனை ஏற்பட்டாலும் தாமதம் செய்யாமல் உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

Exit mobile version