தமிழக அரசுக்கு கீழ் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயங்கி கொண்டிருக்கிறது.இத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி விடுதிகளில் காலியாக உள்ள காப்பாளர் அல்லது காப்பாளினி பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள்
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
பணியின் பெயர்:
*காப்பாளர் / காப்பாளினி
காலிப்பணியிடங்கள்:
காப்பாளர் / காப்பாளினி பணிக்கு என்று மொத்தமாக 497 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
பட்டதாரி ஆசிரியர்கள்,இடைநிலை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் காப்பாளர் / காப்பாளினி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இடைநிலை ஆசிரியர் பட்டயப்படிப்பு,இளங்கலை கல்வியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பப்படுபவர் வயது வரம்பு குறித்த விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மாத ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் பள்ளிக்கல்வி இயக்குனகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.