இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் கார்கள்… ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயோட்டா வரை!!.

0
119

 

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் கார்கள்… ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயோட்டா வரை…

 

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அதாவது இந்த மாதம் புதிய புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆடம்பரக் கார்களான ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயாட்டா நிறுவனங்களின் கார்கள் வரை பல புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

 

புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள கார்களில் பெரும்பாலான மாடல்கள் ஆடம்பரப் பிரிவுகளின் கீழ் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆடி, பென்ஸ், டாடா, டொயாட்டா, வால்வோ போன்ற நிறுவனங்களின் கார்கள் இந்த(ஆகஸ்ட்) மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

 

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிகமாக விற்பனை ஆகும் எஸ்.யூ.வி மாடலின் இரண்டாம் தலைமுறை காரை அறிமுகம் செய்யவுள்ளது. இதைப் போலவே ஆடி நிறுவனமும், வால்வோ நிளுவனமும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்யவுள்ளது. அடுத்து இந்தியாவில் அறிமுகம் ஆகும் கார்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

டாடா பன்ச் CNG…

 

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய காரான CNG பன்ச் மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் அறாமுகப்படுத்தும் புதிய CNG பன்ச் மாடல் கார் ஆட்டே எக்ஸ்போ 2023 நிகழ்ச்சியில் காட்சிபடுத்தப்பட்டது. டாடா நிறுவனம் இந்த புதிய CNGபன்ச் மாடல் காரில் டுவின் சிலிண்டர் செட்டப்பை பயனாளர்களுக்கு வழங்கவுள்ளது.

 

மெர்சிடிஸ் பென்ஸ் GLC…

 

ஆடம்பர கார்களின் தயாரிப்பு நிறுவறங்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் GLC இரண்டாம் தலைமுறை மாடலானது கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மெர்சிடிஸ் பென்ஸ் இரண்டாம் தலைமுறை GLC மாடல் கார் GLC 300 பெட்ரோல் மற்றும் 220d டீசல் என்று இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கவுள்ளது.

 

ஆடி Q இ டிரான்…

 

மற்றொரு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம் தனது ஆடி Q இ டிரான் என்ற புதிய காரை ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி அறிமுகம் செய்கின்றது. இந்த புதிய ஆடி Q இ டிரான் கார் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். ஆடி Q இ டிரான் கார் எஸ்யுவி மற்றும் கூப் என இரண்டு பாடி ஸ்டைல்களில் விற்பனையாகவுள்ளது. இதற்கு முந்தைய மாடல் போலவே ஆடி Q இ டிரான் மாடல் 50 மற்றும் 55 என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கின்றது. இவற்றில் முறையே 95 கிலோவாட் ஹவர் மற்றும் 114 கிலோ வாட் ஹவர் பேட்டரிகளும் வழங்கப்படுகின்றது.

 

டொயோட்டோ ரூமியன்…

 

மற்றொரு கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்யப்பட்ட இரண்டு மாருதி சுசிகி கார்களின் வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இரண்டில் ஒன்று மாருதி சுசிகி எர்டிகா காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட ரூமியன் எம்.பி.வி மாடல் ஆகும். 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் எம்.பி.வி மாடலை விற்பனை செய்யாத நிலையில் இது டொயோட்டா நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வால்வோ சி40 சார்ஜ்…

 

மற்றொரு கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலக்டிரிக் கார் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. வால்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய காருக்கு வால்வோ சி40 ரிசார்ஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் விற்பனை கூடிய விரைவில் துவங்கவுள்ளது.