Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட் தேர்வு தமிழக அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? விரைவில் களமிறங்க இருக்கும் உச்சநீதிமன்றம்!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு உண்டாக்கிய தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது தமிழக அரசு. இந்த குழு நீட் தேர்வால் உண்டாகும் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது, இந்த அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வு எதிராக குரல் கொடுக்கும் தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு பல மாநில முதலமைச்சர்கள் இடமும் தமிழக அரசு சார்பாக கடிதம் வழங்கப்பட்டு வருகிறது என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் முன்னாள் நீதியரசர் ஏ கே ராஜன் தலைமையிலான குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கரூர் நாகராஜன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் நீட் தேர்விற்கான பாதிப்புகளை ஆராய குழு அமைத்தல் அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை கடந்த 13ஆம் தேதி விசாரணை செய்த உயர் நீதிமன்றம் பொதுமக்கள் கருத்தை கேட்டு நீட் தேர்வால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? இல்லையா? என்ற உண்மையை தெரிந்து கொள்ள தமிழக அரசு விருப்பம் கொண்டால் அதனை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அதே போல இந்த ஆய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது இல்லை ஆகவே நீட் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இந்த குழுவிற்கு தடை விதிக்க இயலாது என்று தெரிவித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த சூழ்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிராக சென்னையை சார்ந்த திரிஷா என்பவர் உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தார் இந்த மனுவில் நீட் தேர்வு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், நீட் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி இயற்கை ராஜன் தலைமையில் அமைக்கப்பட்டு இருக்கின்ற குழுவின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், அறிவுறுத்தி இருந்தார் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version