Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனையதள விளையாட்டு தடைச்சட்டம்! தொடர்பான வழக்கு நவ.16க்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!

மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய விளையாட்டு கட்டமைப்பு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் இணையதள விளையாட்டுகளை 18 வயதிற்குட்பட்டவர்களுக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் வழங்கக்கூடாது என்று நிபந்தனை இருப்பதாக கூறினார்.

அதோடு இணையதள விளையாட்டுகளின் தீமைகள் தொடர்பான எச்சரிக்கை அம்சங்களுடன் தான் விளையாட்டுக்கள் வழங்கப்படுவதாகவும், அதற்கு அடிமையாவதை தடுப்பதற்கான சோதனைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தமிழக அரசு ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட திறமையான விளையாட்டுகளை சூதாட்டம் என்று தெரிவித்து தடை விதித்ததை சென்னை உயர்நீதிமன்றம் சென்ற வருடமே ரத்து செய்த நிலையில், தற்போது மீண்டும் ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார்.

ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்டவை திறமைக்கான விளையாட்டுகள் இதில் திறமையான வீரர்கள் வெற்றி பெறுவார்கள் எனவும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் இந்த விளையாட்டுகளை திறமைக்கான விளையாட்டுகளாக கருதுவதாகவும் அதனை பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு அப்பாற்பட்டு வைத்திருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மற்ற மாநிலங்களின் சட்டங்கள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் கொண்டுவரப்பட்டுள்ள, இணையதள விளையாட்டுகள் தடை சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி உள்ளிட்டோரின் அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வழக்கை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை நவம்பர் மாதம் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Exit mobile version