Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு

Case filed due to Whats app conversation

Case filed due to Whats app conversation

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு

ஓமலூர் அருகே வாட்ஸ் அப் குரூப்பில் பெண் குறித்து விமர்சனம் செய்த வாலிபர் மீது கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யந்துரை. இவர் குடிநீர் விநியோகம் செய்யும் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தொழிலாளிம் வேலாயுதம் என்பவருக்கும்,அய்யந்துரைக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரவாதம் உள்ளது.

இந்த நிலையில் வட்டக்காடு பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு என தனியாக வாட்ஸ் அப் குரூப் வைத்துள்ளனர்.இந்த குழுவில் ஊரில் பழுதடைந்து காணப்படும் குடிநீர் குழாய், தண்ணீர் தேவை, தண்ணீர் எடுத்துவிட கூறுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து தகவல் பரிமாறப்படுகிறது.

இந்த குரூப்பில் அய்யந்துரையும், வேலாயுதத்தின் மகன் இளவரசனும் உள்ளனர். இதனிடையே அய்யந்துரை. குழவில்போடும் பதிவுகளை இளவரசன் விமர்சனம் செய்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில் அய்யந்துரையின் மனைவி குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அய்யங்துரை மனைவி, இளவரசனை சந்தித்து தட்டி கேட்டுள்ளார். அப்போது இளவசரன் அவரை திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதனால், பாதிக்கப்பட்ட அய்யந்துரை மனைவி, கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் இளவசரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இளவரசனை தேடி வருகின்றனர்.

Exit mobile version