பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்.. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்குபதிவு..!

0
221

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக வழக்குபதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியில், மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்று திறனாளி பெண் ஒருவர் வசித்து வந்தார். சம்பவதன்று, அந்த பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு நிலையில், அந்த பெண் மட்டும் தனியே இருந்துள்ளார்.

இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் எதிர்க்கவே அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், அந்த பெண் அலறவே சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை பிடிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி சென்றார்.

அந்த பெண்ணின் பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அந்த இளம்பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அந்த தொகுதி எம்.எல்.ஏ குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

இதனால், வெங்கட்ராமன் மீது வழக்கு பதிவு செய்யாமல் அந்த பெண் மீது வழக்குபதிவு செய்தனர். இதனை அறிந்த எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு வெங்கட்ராமன் மீது வழக்குபதிவு செய்ய வலியுறுத்தினர். இதனை அடுத்து, வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள வெங்கட்ராமனை தேடி வருகின்றனர்.