Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தவறான சிக்கைசையால் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்!! விசாரணைக்கு குழுவை அமைத்த அமைச்சர் !!

Case of child's hand removed due to wrong handshake!! The minister formed a committee to investigate !!

Case of child's hand removed due to wrong handshake!! The minister formed a committee to investigate !!

தவறான சிக்கைசையால் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்!! விசாரணைக்கு குழுவை அமைத்த அமைச்சர் !!

தஸ்தகீர் – அஜிதா தம்பதியர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியை சேர்ந்தவர்கள். இருவருக்கு ஒன்றரை வயது மகன் முகமது மையூர். இவர்களின் மகனுக்கு தலையில் வீக்கம் மற்றும் ரத்த கசிவு அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக   குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் மருந்தை வலது கையின் ரத்தக்குழாய் வழியாக ட்ரிப்ஸ் போட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து அந்த குழந்தைக்கு வலது கை வலி ஏற்பட்டுள்ளது. மேலும் ட்ரிப்ஸ் போட்டு சிறிது நேரத்தில் கை கருநீல  நிறமாக மாறியது. அதனையடுத்து வலதுகை செயலிழந்துள்ளது.

இதனை பார்த்த பெற்றோர்கள் பயந்து அங்கிருந்த செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார்கள். அதற்கு  செவிலியர்கள் குழந்தை கையை நன்றாக தேயிக்கும்படி கூறியுள்ளார்கள். மேலும்  அதற்கு மருத்துவர் ஒருவர் ஆயின்மென்ட் எழுதிக்கொடுத்துள்ளார். அந்த ஆயின்மென்டை  போட்டும் அந்த பயனும் இல்லை.

அதனையடுத்து எழும்பூர் அரசு குழந்தை நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த நிலையில் எழும்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தை கை அழுகிய நிலையில் உள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்கள்.

அதனையடுத்து அந்த சிறுவனின் வலது கை அகற்றப்பட்டது. மேலும் சிகிச்சை பெற்று வந்த குழந்தையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து  பெற்றோருக்கு அறுதல் கூறியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து குழந்தை கை அகற்றப்பட்ட விகாரத்தில் உள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் நாளை மாலைக்குள் அதற்கான அறிக்கை வெளிவரும் என்றும் கூறியுள்ளார். இந்த தவறான சிகிச்சை குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Exit mobile version