மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு! உண்மையை சொன்னதற்கு இப்படி ஓர் தண்டனையா…
இரு நாட்கள் முன் திரையுலகமே மிகுந்த துக்கத்தில் இருந்ததது.அனைவரும் சின்ன கலைவாணன் என விவேக்கை போற்றினர்.இவர் நெஞ்சுவலியால் இரு தினங்களுக்கு முன்பு கலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.அவர் இறந்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தது.அவர் இறப்பதற்கு ஓர் நாள் முன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அதன் பின் விளைவாக தான் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என அனைவரும் பேசினர்.ஆனால் யாரும் அச்சமின்றி முன் வந்து பேசவில்லை.மன்சூர் அலிக்கான் மட்டும் செய்தியாளர்களை சந்தித்து வெளிப்படையான உண்மையாய உரைத்தது போல இருந்தது.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்பவர்க்கு எவ்வாறு முதல் நெஞ்சுவலி ஏற்படும் போதே உயிர்போகும் அபலம் ஏற்படும்? என கேட்டார்.கொரோனா என்பது சாதாரண காய்ச்சல் நோய் தான்.அதை ஏன் பெரிதாக மக்களிடம் விமர்சித்து பயம் காட்டி வருகிறீர்கள்.கொரோனா தடுப்பூசியை யார் உங்களை போட சொல்லி சொன்னது என அரசாங்கத்தையே எதிர்த்து பல கேள்விகளை சரமாரியாக கேட்டார்.அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் அனைவரின் மனதில் இருந்தது தான்.
ஆனால் மருத்துவர்கள் இவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொன்டதால் நெஞ்சுவலி வரவில்லை.இவருக்கு இதயக்குழாயில் அடைப்பு ஒன்று இருந்தது.அதற்கு நாங்கள் எக்மோர் சிகிச்சை அளித்தோம்.ஆனால் அந்த சிகிச்சை விவேக்கிற்கு பயனளிக்கவில்லை என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.ஆனால் மன்சூர் அலிக்கானோ ஆணித்தரமாக அவர் மருத்துவர்களுக்கு எதிராக அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தான் உயிரிழந்தார் என தெரிவித்தார்.
இவர் இவ்வாறு கூறுவதால் மக்கள் தடுப்பூசி போட முன் வர மாட்டார்கள்,இவர் இவ்வாறு அவதூறு பரப்பி வருகிறார் என டிஜிபி அலுவலகத்தில் கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் புகார் அளித்துள்ளார்.அதனால் மன்சூர் அலிக்கான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.வழக்கு பதிவு போட்டதால் முன் ஜாமீன் கேட்டு மன்சூர் அலிக்கான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.