Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மின் இணைப்புடன் ஆதார் எண்  இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Case related to connection of Aadhaar number with electricity connection! The order issued by the High Court!

Case related to connection of Aadhaar number with electricity connection! The order issued by the High Court!

மின் இணைப்புடன் ஆதார் எண்  இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சித்  தலைவர் மற்றும் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகின்றது.அந்த மானியத்தை பெற வேண்டும் என்றால் மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டிற்கு மட்டுமே செய்ய முடியும்.வாடகை வீட்டில் இருப்பவர்கள் அவர்களுடைய ஆதாரை இணைத்தால் அவர்கள் வேறு வீட்டிற்கு சென்ற பின் புதிதாக வருபவர்கள் ஆதார்  எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டிருந்தது.அரசானது இந்த புதிய திட்டத்திற்கு சிறப்பு முகாம்கள் நடத்தி வருகின்றன.ஆனால் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பதிலாக வேறு ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்கலாம் என ஏன் அறிவிப்பை வெளியிடவில்லை என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

மேலும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் மின்சார மானியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான விதிகள் எந்த சட்டத்திலும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார். மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்றால் மாநில தொகுப்பு நிதியிலிருந்து வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் ஆதார் எண்ணை மட்டுமே இணைக்க முடியும் என்பதால் அரசு மானியமானது வாடகைதாரர்களுக்கு கிடைக்காது.அப்போது மனுதாரர் தரப்பில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதலை பெறவில்லை என வாதிக்கப்பட்டது.

அந்த வாதத்திற்கு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த அறிவிப்பானது அனைத்து ஒப்புதல் பெறப்பட்ட பிறகுதான் வெளியிடப்பட்டது என தெரிவித்தார். வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு தகுதி இல்லாத வழக்கு என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

Exit mobile version