Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆன்லைன் மூலமாக லட்சக் கணக்கில் மோசிடி!!! பிரபல நடிகையிடம் கைவரிசை காட்டிய மோசடி கும்பல்!!!

#image_title

ஆன்லைன் மூலமாக லட்சக் கணக்கில் மோசிடி!!! பிரபல நடிகையிடம் கைவரிசை காட்டிய மோசடி கும்பல்!!!

பிரபல நடிகை ஒருவரிடம் இருந்து மோசடி கும்பல் ஒன்று ஆன்லைன் வழியாக லட்சக் கணக்கில் பணத்தை ஏமாற்றி உள்ளது. நடிகை அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றது.

வங்காள மொழியில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரீலேகா மித்ரா அவர்கள் வங்காள மொழியில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தி, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் நடிகை ஸ்ரீலேகா மித்ரா அவர்கள் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரீலேகா மித்ரா அவர்கள் தான் தற்பொழுது ஆன்லைன் மோசடியில் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். நடிகை ஸ்ரீலேகா மித்ரா அவர்கள் தனது 48வது பிறந்தநாளை கொண்டாட தயாராக இருந்துள்ளார். அப்பொழுது அவருடைய போனுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

பின்னர் அந்த அழைப்பை எடுத்து பேசிய நடிகை ஸ்ரீலேகா மிஷ்ரா அவர்களிடம் அந்த நபர் செல்போன் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். எதற்கு ஏன் என்று ஆராயாமல் நடிகை ஸ்ரீலேகா மித்ரா அவர்கள் அந்த நபர் கூறிய செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.

பதிவிறக்கம் செய்த சிறிது நேரத்தில் ஸ்ரீலேகா மித்ரா அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து லட்சக் கணக்கில் பணம் மோசடி கும்பலாம் எடுக்கப்பட்டது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நடிகை ஸ்ரீலேகா மித்ரா அவர்கள் காவல் துறையிலும், சைபர் கிரைம் காவல் துறையிலும் புகார் அளித்தார்.

இந்த மோசடி குறித்து நடிகை ஸ்ரீலேகா மித்ரா அவர்கள் “இதுவரை நான் புத்திசாலி என்று என்னை நான் நினைத்திருந்தேன். இப்பொழுது என்னுடைய முட்டாள் தனத்தால் நான் ஏம்மாற்றப்பட்டு ஏமாந்து நிற்கின்றேன். என்னிடம் இருந்து லட்சக் கணக்கில் பணத்தை மோசடி கும்பல் ஏமாற்றி விட்டது. இது குறித்து காவல் துறையிலும் சைபர் கிரைமிலும் புகார் அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

 

Exit mobile version