விவசாயத்தைப் பொறுத்தவரையில் பயிர்களுக்கு எப்பொழுது சேதம் ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. காலநிலை மாற்றங்களால் கூட விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகள் இருந்து அவர்களை காக்க மத்திய அரசு கிஷான் கிரடிட் கார்டுகளை அறிமுகம் செய்திருக்கிறது.
பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் தாக்கலில் கூட கிசான் கிரெடிட் கார்டுகளின் கடன் வரம்பானது 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கடன் வரம்பு உயர்த்தப்பட்டதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வெளியிட்டார். இந்த கிஷான் கிரெடிட் கார்டை எவ்வாறு பெறுதல் என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தகுதியுடையவர்கள் :-
✓ விவசாயிகள்
✓ கூட்டு விவசாயிகள்
✓ குத்தகை விவசாயிகள்
மேலே குறிப்பிட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் 5000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை பயன்பரலாம் என்றும் இதற்கு தகுதியான வயது வரம்பு 18 முதல் 70 வயது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிசான் கிரெடிட் கார்டு :-
✓ பயிர்களை பயிரிடுவதற்கு
✓ அறுவடைக்குப் பின் சந்தைப்படுத்துதல் போன்ற செலவுகளுக்கு
✓ சந்தை படுத்த தேவையான பணம்
✓ விவசாய நிலங்களின் பராமரிப்பு பணிக்கு
✓ விவசாயம் சார்ந்த முதலீடுகளுக்கு
இது போன்ற காரணங்களுக்கு கிஷான் கிரெடிட் கார்டு மூலம் கடன் தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இதனை திருப்பி செலுத்துவதற்கு 5 ஆண்டுகள் வரை கால அளவு கொடுக்கப்படும் என்றும் பயிரினுடைய காலம் அல்லது சந்தைப்படுத்த தேவையான காலம் இதனை பொறுத்து இந்த காலமானது மாறுபடுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வட்டி விகிதம் 3 லட்சம் வரை 7 சதவீதம் ஆகவும் அதனைத் தாண்டும் பொழுது வேறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.