Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் சாதி ஒழிப்பு பெயரளவில் மட்டுமே! நடிகை கஸ்தூரி விளாசல்!

சமீப காலங்களில் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்திலும் சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் சமூக சீர்திருத்தங்களை பற்றி பேசி வருகிறார். சில சமயங்களில் கேள்வியும் எழுப்பி வருகிறார்.  இவ்வாறு பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தனது ரசிகர்களுக்கு சமூகத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைத்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு சமூகத்தில் அதிக அக்கறை கொண்டவராக தற்போது மாறியுள்ள நடிகை கஸ்தூரி இந்த வகையில் இன்று திராவிட கட்சியை திருட்டுத் திராவிடம் என்று விளாசியுள்ளார். நடிகை கஸ்தூரி இதனைப் பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தில் ஜாதி ஒழிப்பு பெயரளவில் உள்ளது என்றும்  பெயருக்கு பின்னால் மட்டும் ஜாதியை ஒழித்து விட்டோம் என்று கூறுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சாதனை கணக்கு கேட்டால் சாதி கணக்கு போட்டு ஜனங்களை ஏமாற்றுபவர்களும் தந்தை பெரியார் பெயரால் வணிகம் செய்யும் போலி  போராளிகளும் ஊருக்கு உபதேசம் செய்ய  ஓடி வருவது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். திராவிடர்களை பற்றி கஸ்தூரி கூறியதாவது,” நாயக்க ன்னு சொன்னதும் சாதியை சொல்லாதே என்று பதருரிங்க பாருங்க அதுதான் திருடனுக்கு தேள் கொட்டிய திருட்டுத் திராவிடம்! முதல்ல நீங்க நிறுத்துங்க அப்புறமா மத்தவங்களுக்கு திருத்தலாம் “என்று விளாசியுள்ளார் கஸ்தூரி.

மேலும் இவர் திராவிட இனத்தை எதிர்க்கவில்லை என்றும் தமிழினத்தின் அடையாளத்தை மறுக்கும் திராவிட சிந்தனையை அரசியலை எதிர்க்கிறேன் என்றும் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.பார்ப்பன வெறுப்பு பேசும் அவர்களை வைத்துப் பிழைக்கும் திருட்டுத்தனத்தை எதிர்க்கிறேன் என்று உரைத்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரியம் திராவிடம் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது என்று திட்டவட்டமாக தனது  கருத்தை தெரிவித்துள்ளார் கஸ்தூரி. மேலும் அவர் ஆதிக் குடிகளை தவிர மற்ற எல்லாரும் கலப்பு தான் நீங்கள் திருடனா இல்லையா? என்பது உங்கள் இனத்தால் அல்ல உங்கள் சிந்தனையால் செயலால்  வருவது என்று கூறியுள்ளார்.மேலும் அவர் திராவிட சித்தாந்தம் திருடர்களின் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் இவர் ஜாதி ஒழிப்பை பற்றி பெருமளவில் பேசி தனது ரசிகர்களையும் தமிழ் மக்களையும் அவ்வாறு நடக்க வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

Exit mobile version