இனி பள்ளிகளில் ஜாதி பெயரை உபயோகிக்க கூடாது!! தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!
கல்வராயன் மலைப்பகுதியில் மக்களுக்கு போதுமான சாலை வசதி மற்றும் பள்ளி கல்லூரிகள் மேம்பாட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு தொடுத்து நடத்தி வருகிறது. தற்பொழுது வரை அந்த தொகுதியில் செய்துள்ள பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆதி திராவிடர் நலத்துறையிடம் உத்தரவிட்டிருந்தது. அந்த அறிக்கையில் தற்பொழுது வரை 80 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டு மேற்கொண்டு 7 கோடி ரூபாயில் பள்ளி மற்றும் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி கூட்டுறவு மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரு விளக்குகள் முதல் சோலார் வரை அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் நீதிபதிகள், இந்த இந்த மேம்பாட்டானது அந்த தொகுதிக்கு போதுமானதாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேபோல சாலைகள் நீங்கள் சொன்னவாறு அமைக்கப்பட்டிருந்தால் ஏன் கர்ப்பிணி பெண்களை தூக்கி செல்கின்றனர்?? ஆம்புலன்ஸ் கூட வர முடியாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீங்கள் கூறிய எதுவும் உண்மை தன்மையாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல சட்ட ஒழுங்கு குறித்து பேசும் அரசானது பள்ளிகளில் பழங்குடியினர் என முத்திரை குத்தி அழைப்பது சரிதானா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேற்கொண்டு இவ்வாறு சாதிப் பெயர்களை முன்னிறுத்தி அரசு பள்ளிகள் செயல்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
உடனடியாக அதனை மாற்றும் வகையில் ஆய்வு செய்யுமாறு அரசு குழு அமைக்க வேண்டும் என்றும் அதனுடன் மூத்த வழக்கறிஞர் செல்ல வேண்டுமென கூறி உத்தரவிட்டுள்ளனர். விரைவிலேயே தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் அரசு பள்ளிகள் என கூறும் சாதிப் பெயர்களை நீக்கம் செய்யப்படும்.