Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று மாட்டுப் பொங்கல்! இந்த தானம் செய்யுங்கள்! செல்வம் மலை போல் பெருகும்!

#image_title

இன்றைக்கு மாட்டுப் பொங்கல் வருடம் முழுவதும் உழவனுக்காகவே வருந்தும் அந்த மாட்டிற்கு இன்று அந்த மாட்டை கடவுளாக பாவித்து நாம் அதற்கு உணவு அளித்து மகிழ்வது தான் மாட்டுப் பொங்கல்.

 

மாடுகள் இல்லையென்றால் உழவு இல்லை என உணர்ந்த விவசாயி மாடுகளுக்கு என்றே பொங்கல் வைத்து வழிபடுவான் அப்படி இதை எந்த விதத்தில் செய்தால் எப்படி செல்வம் பெருகும் என்பதை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்.

 

கிராமங்களில் மாடுகள் இருக்கும் அதனால் மாட்டை குளிப்பாட்டி அதற்கு பூஜை செய்வார்கள் நகரங்களின் கூட இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் பூஜை செய்தால் உங்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

 

1. கிராமங்களில் முதலில் மாட்டை குளிப்பாட்டுவதற்கும் முன்பு மாட்டின் கொட்டகையை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

2. மாட்டை நன்கு குளிப்பாட்டி கொம்புகளுக்கு நல்ல வர்ணம் பூசி கால்களில் பணம் மஞ்சள் குங்குமம் வைத்து சலங்கை போல் கட்டிக் கொள்ளுங்கள்.

3. இன்றைக்கு மாட்டுக்கு பூஜை செய்வது நல்ல நேரம் ஏழரை மணி முதல் எட்டரை மணி

வரை, மாட்டு குட்டகையை நன்கு சுத்தம் செய்த பின் பச்சரிசியை கொண்டு அரைத்த மாவினால் கோலம் எடுங்கள்.

ஊதுபத்தி சாம்பிராணி காட்டி மாட்டிற்கு பூஜை செய்யுங்கள்.

பூஜை செய்து முடித்த பின் பச்சரிசியை ஊறவைத்து அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து இந்த தானத்தை மாடுகளுக்கு தந்தால் செல்வம் மலை போல் பெருகும். ஊறவைத்த சம்பா கோதுமையுடன் வெல்லம் கலந்து மாடுகளுக்கு கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். வாழைப்பழம் அகத்திக்கீரை கூட கொடுக்கலாம்.

 

2. நகர்ப்புறங்களில் அல்லது வீடுகளில் மாடுகள் இல்லாதவர்களோ காமதேனு சிலை இருந்தால் அல்லது காமதேனும் படம் இருந்தால், அதற்கு நீங்கள் அபிஷேகம் செய்து வழிபடலாம். பசும்பால் ஊற்றி அல்லது நெய் ஊற்றி தேனூற்றி அபிஷேகம் செய்து வழிபடலாம். கோயில்களில் நடக்கும் கோ பூஜையில் கலந்து கொண்டால் நல்லது நடக்கும். வீடுகளில் மாடு இல்லாதவர்கள் அருகில் உள்ள மாடுகள் அல்லது கோயில்களில் மாடுகள் இருந்தால் ஊறவைத்த பச்சரிசியுடன் வெல்லத்தை கலந்து மாடுகளுக்கு கொடுத்தால் நல்லது.

Exit mobile version