Manipur State:கலவரத்துக்கு காரணம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மணிப்பூர் மாநிலத்திற்கு மியான்மர் நாட்டை சேர்ந்த நபரை அழைத்து வந்தது தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் பைரன் சிங்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டில் நடந்தது போலவே தற்போது கலவரம் வெடித்துள்ளது. அங்கு ஒரு சில நாட்களுக்கு முன் முதல்வர் வீடு மற்றும் 13 எம்.எல்.ஏக்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இது மணிப்பூர் மாநிலத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தியது.
எனவே நிலைமை கட்டுக்குள் கொண்டு வர உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது. பின் 5000 ஆயிரம் துணை ராணுவப் படையினர். மணிப்பூர் மாநிலத்தில் அனுப்பபட்டார்கள். தற்போது வரை அங்கு போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது தொடர்பாக ப.சிதம்பரத்தின் அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் தற்போது உள்ள மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் முதல்வர் பைரன் சிங்ன் முறையற்ற தலைமைப் பண்பு தான் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது தங்கலியன் பாவ் கைட் என்ற மியான்மர் நாட்டை சேர்ந்த நபரை மணிப்பூர் மாநிலத்திற்கு அழைத்து வந்தது தான் காரணம் என்றும், மியான்மர் நாட்டை இருந்து மணிப்பூர் மாநிலத்தில் குடியேறியவர்கள் தான் தற்போது கலவரம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்து இருக்கிறார்.