மாரடைப்பு நோய் உயிருக்கு ஆபத்தானதை போல் பக்கவாதமும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய் பாதிப்பாக உள்ளது.நமது மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் மாற்றம் ஏற்படும் பொழுது பக்கவாதம் ஏற்படுகிறது.மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபடும் பொழுது அங்குள்ள செல்கள் இறக்க ஆரம்பிக்கின்றன.இதனால் திடீர் சுய நினைவை இழத்தல்,பேசுவதில் சிரமம் ஏற்படுதல் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.
பக்கவாதத்தின் இரண்டு வகை:
**இஸ்கிமிக்
**இரத்த கசிவு
பக்கவாத அறிகுறிகள்:
1)பேசுவதில் சிரமம் ஏற்படுதல்
2)முகம் ஒருபக்கம் பலவீனமடைதல்
3)அதிகமான தலைவலி
4)மங்கிய கண் பார்வை
5)கை,கால் பலவீனமாதல்
6)சுயநினைவை இழத்தல்
7)குமட்டல்
8)வாந்தி உணர்வு
இந்த பக்கவாத அறிகுறிகள் சில நிமிடங்கள் அல்லது சிலமணி நேரம் வரை நீடிக்கலாம்.
பக்கவாதம் வருவதற்கான காரணங்கள்:
1)உயர் இரத்த அழுத்தம்
2)நீரிழிவு நோய்
3)உடல் எடை அதிகரித்தல்
4)கொலஸ்ட்ரால் பிரச்சனை
5)புகைப்பழக்கம்
பக்கவாதத்தை தடுக்க செய்ய வேண்டியவை:
உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் அதை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் திடீர் பக்கவாதம் ஏற்படும்.
ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தை கைவிட்டுவிட்டு சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
மது மற்றும் குடி பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
வயது,குடும்ப வரலாறு போன்ற காரணங்களாலும் பக்கவாதம் ஏற்படுகிறது.பக்கவாத பாதிப்பை ஆண்களைவிட பெண்களே அதிகமாக எதிர்கொள்கின்றனர்.ஆண்டில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு பக்கவாதம் ஏற்படுவதாக ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளது.
தற்பொழுது அனைத்துவித பக்கவாதங்களுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.உங்களுக்கு CT ஸ்கேன் மூலம் பக்கவாதம் பரிசோதனை கண்டறியப்படுகிறது.பக்கவாத வகையை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.
பக்கவாதம் ஏற்பட்டவர்கள் அதில் இருந்து சில தினங்கள்,சில வாரங்கள் அல்லது சில வருடங்கள் ஆகும்.சிலருக்கு பக்கவாதத்தில் இருந்து பல வருடங்கள் எடுத்துக் கொள்கிறது.பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்களால் பழைய நிலைக்கு வருவது கடினமாகிவிடும்.
உணவு விழுங்குவதில் சிக்கல்,உணர்வின்மை,பேசுவதில் சிரமம்,குழப்பமான மனநிலை போன்ற பிரச்சனைகளை பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்கள் சந்திக்க நேரிடுகிறது.