Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏன் நமக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கிறது..!! காரணம் இதோ..!!

Goosebumps In tamil

Goosebumps In tamil: நமக்கு சில நேரங்களில் உடம்பெல்லாம் சிலிர்க்கும். அதனை தான் நாம் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது என்று நாம் கூறுவோம். இந்த நிகழ்வு பெரும்பாலும் குளிர்காலங்களில் நிகழும். நன்றாக குளிரும் போது இவ்வாறு நடக்கும். திடீரென்று நம் உடம்பில் உள்ள முடி எல்லாம் எழுந்து நிக்கும். தோலில் ஏதோ சிறு சிறு புள்ளிகள் போல் இருக்கும். சிறிது நேரத்தில் மறைந்துவிடும்.

இந்த நிகழ்வு ஏன் ஏற்படுகிறது. எந்த நேரங்களில் ஏற்படுகிறது என்று இந்த பதிவில் காண்போம்.

புல்லரிப்பு என்றால் என்ன? – Goosebumps

இந்த புல்லரிப்பு பெரும்பாலும் திடீரென்று நீங்கள் பயம் ஏற்படும் போது, எதிர்பாரவிதமாக ஒரு நிகழ்வை சந்திக்கும் போது, குளிர்காலங்களில், மிகவும் மகிழ்ச்சிசயாக உணரும் போது நமது உடலில் திடீரென்று ஒரு உணர்வு தோன்றும். அப்போது நமது உடலில் உள்ள முடிகள் எல்லாம் எழுந்து நிற்கும். தோல் இறகு பிடுங்கிய வாத்து போல இருக்கும் அதனால் தான் ஆங்கிலத்தில் இதனை Goosebumps என்று அழைக்கிறோம்.

மேலும் இது ஏற்பட காரணம் என்னவென்று பார்த்தால் திடீரென்று நடக்கும் ஒரு செயலை நமது மூளை சந்திக்கும் போது ஒரு வகையான ஹார்மோன்கள் சுரக்கிறது. நமது உடலில் உள்ள மெல்லிய தசையான ஆர்க்டர் பிலி தசைகள் உள்ளன. இப்போது இந்த ஹார்மோன் உடலில் சுரந்த உடன் ஆர்க்டர் பிலி தசையுடன் இணைப்பில் உள்ள முடிகள், ஆர்க்கடர் பிலி தசை சுருங்கி இழுக்கும் போது முடிகள் நிமிர்ந்து உடலில் புல்லரிப்பு ஏற்படுகிறது.

பைலோரெக்ஷன், ஹார்பிபிலேஷன் போன்ற மருத்துவப் பெயர்களும் வைத்து அழைக்கப்படுகிறது. இந்த புல்லரிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் இவ்வாறு நடக்கிறது. சில விலங்குகள் மற்ற விலங்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்கு இதனை பயன்படுத்துக்கின்றன. முள்ளம்பன்றி போன்ற விலங்கள் மற்ற விலங்கள் அதனை தாக்க வரும் போது இவ்வாறு செய்து அதனை பாதுகாத்து கொள்கிறது.

மேலும் மனிதர்களுக்கு குளிர்க்காலங்களில் இவ்வாறு ஏற்படுவதற்காக காரணம் குளிரில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தன்னிச்சையாக நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களால் இவ்வாறு ஏற்படுகிறது.

மேலும் படிக்க: இறந்தவர்களின் படத்தை தவறுதலாக கூட இந்த திசையில் மாட்டி விடாதீர்கள்..!!

Exit mobile version