வெயில் கால நோய்களில் ஒன்றான ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!!
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.இதனால் அனைவரும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.முற்பகல் நேரகங்களில் வெளியில் செல்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருக்கிறது.
வரலாறு காணாத வெயில் தாக்கத்தால் உடல் ரீதியாக பல பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.தற்பொழுது அக்னி நட்சத்திரம் தொடங்கி பெரும்பாலான பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.
வீசி வரும் அனல் காற்றால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.இந்த கடுமையான வெயிலின் தாக்கம் நீடித்தால் பெரும்பாலானோருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து வாந்தி,மயக்கத்துடன் கூடிய வலிப்பு ஏற்படுவதை தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று அழைக்கிறார்கள்.இந்த ஹீட் ஸ்ட்ரோக் சில சமயம் உயிரிழப்பை கூட ஏற்படுத்தி விடும்.
ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான காரணங்கள்:
1)வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரத்தில் செல்வதால் இந்த பாதிப்பு ஏற்படும்.
2)உடலில் நீர்ச்சத்து குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படும்.
ஹீட் ஸ்ட்ரோக் வராமல் இருக்க வழிகள்:
1)உடலுக்கு தேவையான நீரை அருந்த வேண்டும்.வெயில் காலம் என்பதினால் அதிகளவு நீர் அருந்துவது அவசியம்.
2)காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் செல்வது நல்லது.
3)உடலை குளிர்ச்சியாகும் இயற்கை பானங்களை அருந்துவது நல்லது.
4)குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கோடை காலத்தில் வெளியில் வருவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
5)நிழலான இடத்தில் அதிக நேரம் ஓய்வு எடுப்பது அவசியம்.
6)வெளியில் செல்லும் பொழுது குடை மற்றும் தண்ணீர் எடுத்து செல்லுதல் அவசியம் ஆகும்.