Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்ளங்கை அரித்தால் பணம் கிடைக்குமா? தொடர்ந்து உள்ளங்கை அரித்தால் என்ன பலன்..!!

Itching of palms in Tamil

Woman scratch the itch with hand,healthcare concept

Itching of palms in Tamil: பொதுவாக ஆன்மீக சாஸ்திரங்களின் படி சில விஷயங்களை நமக்கு நம் பெரியவர்கள் கூறி இருப்பார்கள். அதில் அறிவியலும் இருக்கும். ஆனால் ஆன்மீக ரீதியாக மட்டும் பார்ப்பதினால் மக்களுக்கு நம்பகத்தன்மை என்பது ஏற்படுவதில்லை. நமக்கு உள்ளங்கை அரித்தால் பணம் கிடைக்க போகிறது. உனக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது என்றெல்லாம் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவ்வாறு உள்ளங்கை அரித்து பணம் கிடைத்ததாக கூறி அவ்வளவாக நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஏனென்றால் அவ்வாறு கூறுவதோடு சரி.

உள்ளங்கை அரித்தால் பணம் கிடைக்கும் என்று ஏன் அப்படி கூறுகிறார்கள். உண்மையில் பணம் கிடைக்குமா, உள்ளங்கை அரிப்பு ஏற்பட காரணம் என்னவென்று இந்த பதிவில் (ullangai arithal enna palan) காண்போம்.

உள்ளங்கை ஏன் அரிக்கிறது?

ஒருவருக்கு உள்ளங்கை அரிப்பு ஏற்பட காரணம் என்னவென்று பார்த்தால் அதற்கு முக்கிய காரணம் அவர்கள் தோலுக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய இராசாயனப்பொருட்களை அவர்கள் பயன்படுத்தி இருந்தால் அதனால் உள்ளங்கை அரிப்பு ஏற்படும்.

மேலும் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக உள்ளங்கை ஒரு சிலருக்கு வியர்க்கும். அதனால் அவர்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்பட்டு உள்ளங்கை தொடர்ந்து அரித்துக்கொண்டு இருக்கும்.

ஒருசிலருக்கு ஏதேனும் அரிப்பு ஏற்படுத்தும் விதமான உணவை எடுத்துக்கொண்டால் அது அவர்களுக்கு உள்ளங்கை அரிப்பை ஏற்படுத்தும்.

மேலும் அவர்கள் நீரில் அதிகமான நேரம் வேலை பார்த்தார்கள் என்றால் உள்ளங்கை அரிப்பு ஏற்படுகிறது.

ஆன்மீக ரீதியாக உள்ளங்கை அரித்தால் என்ன பலன்

முன்பு கூறியது போலவே இந்து சாஸ்திரங்களின் படி சில நிகழ்வுகளை நம் முன்னோர்கள் குறித்து வைத்துள்ளனர். அதன் படி நிறைய பலன் கள் உள்ளன, அதாவது பல்லி விழும் பலன் முதல் கனவு பலன், கண்கள் துடித்தால் என்ன பலன் போன்ற பலன்களை குறித்து வைத்துள்ளனர்.

அதிலும் பலன்கள் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் பலன்கள் உள்ளன. அந்த வகையில் உள்ளங்கை அரித்தால் என்ன மாறியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஆண்களுக்கு வலது உளங்கை அரித்தால் வரவு உண்டாகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதுவே இடது உள்ளங்கை அரித்தால் மருத்துவ செலவுகள் வர வாய்ப்புள்ளது

பெண்களுக்கு வலது உள்ளங்கை அரித்தால் செல்வம் குறைவதை குறிப்பதாகும். திடீர் செலவு, உடல் நல பாதிப்பு போன்றவற்றை குறிப்பதாகும். இதுவே இடது உள்ளங்கை அரித்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட இந்த பூ பற்றி தெரியுமா? துன்பத்தை போக்கும் தும்பை..!!

Exit mobile version