Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்?

CBCIT Referral! The result of the fraud in the NEET exam!

CBCIT Referral! The result of the fraud in the NEET exam!

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்?

தற்போது மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மோசடி என்பது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இந்த  நீட் மோசடியை தடுக்க கருவிழி பதிவு மற்றும் பேஸ் டிடெக்டரை பயன்படுத்தலாம் என ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரைத்துள்ளது. இதனைதொடர்ந்து கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர்  உன்னியாலை பகுதியை  சேர்ந்த ரஷீத் (45) ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 நீட் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் தேனி சிபிசிஐடி போலீசார், மாணவர்கள், பெற்றோர் பலரை கைது செய்தனர். இந்த மோசடியில் ரஷீத்  கைது செய்துள்ளனர். ஆனால் எனக்கு இந்த மோசடியில் எந்த தொடர்பும் இல்லை. தவறாக எனது பெயரை வழக்கில்சேர்த்துள்ளனர். ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.

கைதானவர்களின் தகவலின்பேரில் தான்  பலரை கைது செய்துள்ளனர். ஜாமீன் கோரிய எனது மனுவானது கடந்த பிப்பரவரி  16ஆம் தேதியன்று  தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த நீட் மோசடியை தடுபதற்காக நீட் தேர்வு மையத்தில் ஒவ்வொருவரையும் வீடியோ பதிவு செய்யது . தேர்வு அனுமதி சீட்டில் உள்ள புகைப்படத்தை ஒப்பீடு செய்ய வேண்டும்.

 அதன் பிறகு விண்ணப்பம் தேர்வு மையம் மற்றும் கவுன்சலிங் ஆகிய இடங்களில் கைரேகை பதிவு செய்யப்பட வேண்டும். பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும். தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யலாம் என்று கூறியிருந்தார். இதையடுத்து மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி நீதிபதி  தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.

Exit mobile version