பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதலை! அதிர்ச்சியளிக்கும் தகவல்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தையே அதிர்சிக்குள்ளாக்கிய பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதளையாகியுள்ளது தமிழக மக்களை அதிர்சிக்குள்ளக்கியுள்ளது.
அதாவது பொள்ளாச்சியில் நடந்த இந்த சம்பவத்தில் காதல் என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்ததுடன் அதை ஆபாசமாக மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் அதை வைத்து கொண்டு மீண்டும் மீண்டும் அவர்களை மிரட்டி கற்பழித்ததுடன் அவர்களிடம் இருந்து நகை, பணம் என கொள்ளையும் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இந்த சம்பவம் நடைபெற்ற பின்பு கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர் . இந்த விசாரணையின் போது தான் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது இந்த பாலியல் வழக்கில் பெரிய இடத்து இளைஞர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்கள் காதல் என்ற பெயரில் இது போன்ற அப்பாவி இளம் பெண்களை ஏமாற்றி அவர்களுடைய பாலியல் வலையில் சிக்க வைத்து உள்ளனர் என்றும் இந்த விசாரணையின் மூலமாக தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த காவல் துறை அதிகாரிகள் குற்றவாளிகளான சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கானது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆரவலர்களின் வேண்டுகோளின் படி சிபிஐ விசாரணைக்கு மாறியது. ஆரம்பத்திலிருந்து இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த சிபிஐ இது குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கண்டறிந்தனர். இந்நிலையில் இது பற்றி புகார் அளித்த அந்தப் பெண்ணின் சகோதரனை இந்த பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதாகவும் கூறப்பட்டது . இதனால் குற்றவாளிகள் மீது இது குறித்து மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையும் சிபிஐ அதிகாரிகளே மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த அடிதடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாபு, செந்தில், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் உள்ளிட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
தற்போது சிபிஐ விசாரணையில் உள்ள இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் இந்த வழக்கு முன்னேற்றம் ஏதுமில்லாமல் இருக்கிறது. இதனையடுத்து சிபிஐ இந்த வழக்கை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையானது வரும் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது அன்றைய தினத்தில் இந்த வழக்கிற்கான இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கும் வரும் 5 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கிலும் பல்வேறு மாற்றங்களும் திருப்பு முனைகளும் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அறிந்துள்ள இந்த குற்றத்திலேயே ஆதாரங்கள் இல்லையென வழக்கை கைவிடுவதாக அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.